MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாரமதியில் இன்றைய தினம் வெகு விமர்சையாக நிகழ்வு நடைப்பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK), தனுகா அக்ரிடெக் மற்றும் Bavaria ISUZU ஆதரவுடன் நடைப்பெற்ற MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் வல்லுநர்கள் வருமானத்தை அதிகரிப்பது பற்றிய நுண்ணறிவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மில்லினியர் விவசாயிகள் கௌரவிப்பு:
முற்போக்கு விவசாயியும், Baramati FPCL FPO-வினை சேர்ந்த பிரஹலாத்வரே, தங்களது FPO கடந்து வந்த பாதையினையும், சவால்களை கையாண்ட விதம் குறித்தும் ஆற்றிய உரை விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்தது. நிகழ்வின் முக்கிய பகுதியாக, முன்னோடி விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
'கரும்பில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை' மற்றும் 'டிராக்டர் தொழிலில் புதுமை' போன்ற முக்கியமான தலைப்புகளில் நிபுணர்கள் விவசாயிகளுக்கு புதிய ஆலோசனைகளையும், அவர்களது சந்தேகங்கங்களுக்கு தீர்வுகளையும் நிகழ்வில் வழங்கினர்.
கே.வி.கே.பாரமதியின் தாவரவியல் பாதுகாப்பிற்கான நிபுணர் டாக்டர். மிலிந்த் ஜோஷி, கரும்பில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து உரையாற்றினார். மஹிந்திரா டிராக்டரின் மண்டல சந்தைப்படுத்தல் மேலாளர் ராம்தாஸ் உகலே, டிராக்டர் பராமரிப்பு மற்றும் டிராக்டர் தொழிலில் தற்போதைய புதுமையான நடைமுறைகள் பற்றி பேசினார். தனுகா அக்ரிடெக் லிமிடெட்டின் மண்டல மேலாளர் ராகுல் தேஷ்முக், பங்கேற்பாளர்களுக்கு பயிர் பராமரிப்பு மற்றும் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து விளக்கினார்.
பவேரியா ISUZU இன் பகுதி விற்பனை மேலாளர் சன்ஜோக் தாஸ், அவர்களின் ஷோரூமில் வாகனம் வழங்குவது மற்றும் பங்கேற்பாளர்கள் எவ்வாறு பார்வையிடலாம் என்பதைப் பற்றி பேசினார்.
இந்த நிகழ்வில் சந்தோஷ் கோடசே, லக்ஷ்மன் அம்பாவாலே, சந்தோஷ் கரஞ்சே, சுப்ரியா பந்தல், போன்றோர்களும் சிறப்புரையாற்றினர். விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது பற்றி KVK பாரமதி புனேயில் உள்ள மூத்த விஞ்ஞானியும் தலைவருமான டாக்டர் தீரஜ் ஷிண்டே உரையாற்றினார். AI உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தியாவில் வேளாண் பணிகளில் AI எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், அதன் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெற உள்ளது.
Read more:
வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா?
மாட்டு சாணத்திலிருந்து எரிவாயு- வாகனங்களில் நிரப்ப பங்க்: விலை எவ்வளவு?