செல்ஃபோன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவர் (College student)
கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சிவராம். 18 வயதான சிவராம், கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன் இரவு தூங்க சென்றபோது, வழக்கம்போல் வீட்டில் தனது அறையில் உள்ள படுக்கையில் இருந்தவாறு செல்ஃபோனை பார்த்து கொண்டிருந்துள்ளார்.
தொடர்ந்து சார்ஜில் (On constant charge)
அப்போது அதில் சார்ஜ் தீர்ந்துவிடவே செல்ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு அப்படியோ தூங்கிவிட்டார். தொடர்ந்து பல மணிநேரம் செல்ஃபோன் சார்ஜிலேயே இருந்ததால், மின் இணைப்பில் இருந்த செல்ஃபோன் மறுநாள் அதிகாலை வெடித்துள்ளது. இந்த தீ, சிவராமின் படுக்கையில் பரவி அவர் மீதும் பற்றியது.
தீக்காயம் (Burn)
இந்த விபத்தில் உடலில் பல்வேறு பகுதிகளிலும் தீக்காயங்கள் அடைந்த சிவராம் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிவராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கவனம் தேவை (Needs attention)
இந்த அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே செல்ஃபோனைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும், அதனை சார்ஜ் போடும்போது, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...