மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 January, 2022 4:53 PM IST
Central Government: Announcement of Rs. 1000/per month for students

இந்த அறிவிப்பு 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது, அவர்களின் அடுத்த கட்டமான, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதில் 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயனடையும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இத்திட்டத்தில் பயனடைய, செய்ய வேண்டியது, தேவையானவை, விண்ணப்பிக்கும் விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வை எழுத வேண்டியது அவசியம். இந்த தேர்வுக்கு 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இது படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கான தேர்வு மார்ச் மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவ- மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவார்கள்.

இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை 12-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வருகிற 27-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘2021-22-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க மாறவாதீர்கள்.

மேலும் விவரங்களை அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் அறிந்துக்கொள்ளலாம். இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும் போது முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது’ என்று அதில் செய்திக்குறிப்பு தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க:

தபால் அலுவலகத்தின் செல்வ மகள் சேமிப்பு திட்டம்! விவரம் இதோ!

கண்ணை கவரும் ரோஜா சாகுபடி செய்ய தேவை, பயன் என்னன்ன?

English Summary: Central Government: Announcement of Rs. 1000/per month for students
Published on: 24 January 2022, 12:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now