News

Sunday, 26 March 2023 11:15 AM , by: R. Balakrishnan

Digital Ration card

இந்தியாவில் 19.79 கோடி குடும்ப அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதுவாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய இணைய முகப்பு வசதியை உருவாக்கியுள்ளன.

பொது விநியோக முறையில், 5.33 லட்சம் நியாயவிலைக் கடைகளில் விற்பனைக்கான மின்னணு இயந்திரம் பொருத்தப்பட்டது. தகுதியான நபருக்கு பொருட்கள் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் மின்னணு முறையிலான கைரேகைப் பதிவு, பொருட்கள் வாங்கியவுடன் நுகர்வோரின் செல்போனுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி

முதற்கட்டமாக 2022 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டமும், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது விநியோகம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 5ஆம் தேதி வரை தோராயமாக 95.72 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி இரண்டாம் கட்டமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ரேஷன் கார்டு (Digital Ration card)

பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானியத் திட்டம், ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டைத் திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மத்திய உணவு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக நடைமுறை சீர்திருத்திங்களின் ஒரு பகுதியாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு: ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

இவர்களுக்கு மட்டும் இனி அதிக பென்சன் கிடைக்கும்: மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)