News

Wednesday, 14 April 2021 04:01 PM , by: Daisy Rose Mary

கொரோன தொற்றின் 2-வது அலை பரவுவதால் விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பேச்சு வார்த்தைக்கு நாங்களும் தயார் எனவும், எங்கள் கோரிக்கைகள் எந்த மாற்றமும் இல்லை என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பஞ்சாப், அரியாணாவை சேர்ந்த விவசாயிகள் கடந்த 135 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், வேளாண் சட்டங்களை கைவிடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதியாக இருந்து வருகின்றனர். 

கொரோனா 2வது அலை

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்தய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார், அப்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக முதியவர்களையும் சிறார்களையும் வீட்டுக்கு திரும்ப அறிவுறுத்துங்கள் என நான் விவசாய சங்க தலைவர்களிடம் பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்

தற்போது கொரோனாவின் 2-வது அலை துவங்கியுள்ளது. விவசாயிகளும் விவசாய சங்கங்களும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும், மத்திய அரசு சட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க தயராக இருப்பதாகவும் புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யவும் நாங்கள் முன்வந்தோம். ஆனால், எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் விவசாய சங்கங்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர் என்றார்.

பேச்சுவார்த்தைக்கு ரெடி

இதனிடையே, மத்திய அமைச்சரின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகைத், நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால், தங்கள் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க... 

தமிழக மக்களுக்கு, தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி! 

விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)