சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். விவசாக்கிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.
திட்டத்தில் இணைய விரும்புவர்களுக்கான தகுதி மற்றும் பலன்கள்
பிரதம மந்திரி விவசாகிகள் ஓய்வுதியத் திட்டத்தில் இணையும் விவசாயிகள் அனைவருக்கும் 60 வயதிற்கு பிறகு ஓய்வு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப் படும் என அறிவித்திருந்தது. தகுதி வாய்ந்த விவசாகிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
மத்திய அரசின் இந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவாசகிகள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையில் விவசாய நிலம் கொண்டிருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம். ஒவ்வொரு மாதமும் ப்ரிமியமாக ரூ.55 முதல் ரூ.200 வரைசெலுத்த வேண்டும். விவசாகிகள் செலுத்தும் நிகரான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தும். அவரவர் வயதிற்கேற்ப ப்ரிமியம் தொகை மாறுபடும். ஓய்வு காலத்திற்கு பிறகும் விவசாகிகளுக்கு நிரந்தர வருமானத்தை தர வல்லது. திட்டத்தில் இணைய விரும்பும் விவசாகிகள் பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதுவரை 500-க்கும் அதிகமான விவசாகிகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர்.
வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், இந்த திட்டமானது ஜம்மு, காஷ்மீர், லடாக் வரை விரிவுபடுத்தப்படும். வெகு விரைவில் விவசாயிகளின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகள் இணைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக தெரிவித்தார்.
திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்
- இந்த திட்டத்தில் இணைந்த விவாசகிகள் ஓய்வூதிய திட்டம் முடியும் முன்பே இறந்து விட்டார் எனில் அவருடைய மனைவி திட்டத்தை தொடரலாம். அவருக்கு விருப்பம் இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் சிறிது வட்டியும் சேர்த்து மனைவிக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கு போய் சேரும்.
- ஓய்வூதியம் பெற்று கொண்டிருக்கும் விவசாயி இறந்தால் அவரது மனைவிக்கு 50% அதாவது ரூ 1500/- வழங்கப்படும்.
- கணவனோ, மனைவியோ உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப் படும்.
- ஒரு குடும்பத்தில் உள்ள கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
பிஎம் கிஸான் திட்டம்
பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடதிற்கு ரூ.6,000 உதவித் தொகையை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மொத்தமாக இந்த திட்டத்தில் 14.5 கோடி விவசாயிகள் இணைக்கப்பட உள்ளனர். இதற்கென 2019-2020 நிதி ஆண்டில் ரூ.87 ஆயிரம் கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் தவணையானது இதுவரை 5.88 கோடி விவசாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran