1.ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் இனி பாக்கெட்டில் வழங்க திட்டம்
ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வீணாகாமல் இருக்க, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய நான்கு பொருட்களையும் பாக்கெட்டுகளில் வழங்க சிவில் சப்ளைஸ் துறை முடிவு செய்துள்ளது.
"உத்தேச நவீன அரிசி ஆலைகள் நிறுவப்பட்டதும், நாங்கள் 5 முதல் 10 கிலோ பைகளில் அரிசியை பேக்கேஜிங் செய்யத் தொடங்குவோம், பின்னர் அவை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். படிப்படியாக, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற பிற பொருட்களையும் பாக்கெட்டுகளில் விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். 25 கிலோவுக்கு கீழ் உள்ள பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவோம்” என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கினார்.
2.இயந்திரமயமாக்கப்படும் நேரடி கொள்முதல் நிலையங்கள்
நேரடி கொள்முதல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணிகள் முழுமையும் விரைவில் இயந்திரமயமாக்கப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொள்முதல் பணிகளை இயந்திரமயமாக்கும் திட்டம் நிறைவேறினால், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல் அழுத்தத்தை குறைக்க இயலும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
3.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் மே மாத இலவச பயிற்சி விவரம்
16.05.2023 தரை துடைக்கும், பாத்திரம் கழுவும் மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் தயாரிப்பு தொழில்நுட்பம் செய்முறை பயிற்சி
17.05.2023 நாட்டு கோழி வளர்ப்பு
20.05.2023 தேனீ வளர்ப்பு பயிற்சி
23.05.2023 பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு
30.05.2023 காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில்நுட்பம்
4.தமிழகத்தை குளிர்விக்கும் மழை
தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர்
நாமக்கல், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
5.தங்கம் விலை அதிரடியாக குறைவு இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
6.கொடைக்கானலில் பழுத்து குலுங்கும் பலா
கொடைக்கானலில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல் பலா மரங்களில் காய்கள் காய்த்து தொங்குகின்றன.
இந்தநிலையில் மலைப்பகுதியில் பலாப்பழங்களை பறித்து விற்பனைக்காக பல்வேறு இடங்களில் சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அதேபோல் வெளியூர்களுக்கும் பலாப்பழங்களை விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் பலாப்பழங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
நெல் மூட்டையினை அளக்க, குடோனில் வைக்க இனி ஆட்கள் வேண்டாமா? அரசின் புதிய முயற்சி
இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை- உங்கள் மாவட்டமும் லிஸ்டில் இருக்கிறதா?