வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காற்று வீசும் திசை மாறி இருந்த காரணத்தால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்திருந்தது.
மேலும் இன்னும் ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம், ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரம் படி சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் மட்டும் அதிக பட்ச மழையாக 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது, மற்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவித்தார்.
K.Sakthipriya
Krishi Jagran