News

Sunday, 21 February 2021 02:03 PM , by: Daisy Rose Mary

Credit : DNA

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளிமண்டல வேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக,

அடுத்த 5நாட்களுக்கு...

  • 21-02-2021 : தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்

  • 22-02-2021 : தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • 23-02-2021 : தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • 24-02-2021 & 25-02-2021 : தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசனது முதல் மிதமான மழை பெயக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரி கடலூர் தலா 19செமீ., மணிமுத்தாறு (திருநெல்வேலி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), தலா 10செமீ., பாபநாசம் (திருநெல்வேலி), 8செமீ., சேரன்மாதேவி(திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), புவனகிரி (கடலூர்) தலா 7செமீ., குன்னூர் (நீலகிரி) 6செமீ., சூளகிரி (கிருஷ்ணகிரி), மரக்காணம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்) தலா 5செமீ., ஊத்துக்குளி (திருப்பூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சங்கரி துர்க் (சேலம், பழனி (திண்டுக்கல்) தலா 4செமீ., மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க..

நடப்பு ஆண்டில் 356 மெட்ரிக் டன் விதை நெல் விநியோகம், நடப்பு பருவத்திற்கும் விதை பொருட்கள் கையிருப்பு - ஈரோடு ஆட்சியர் தகவல்!!

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.1147 கோடி வழங்கல்!

வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை

புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதுகாப்பதோடு உரிய விலை பெற்றுத் தரும் - நிர்மலா சீதாராமன் பேச்சு!

மகசூல் விளைச்சலை அளவிட ட்ரோன்களை பயன்படுத்தலாம்! - வேளாண்துறைக்கு அனுமதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)