சென்னையில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல்லில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகரில் நாளை கனமழை பெய்யும். சிவகங்கை, தூத்துக்குடியிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை, கலசப்பாக்கத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
மேலும் படிக்க