News

Saturday, 09 October 2021 04:23 PM , by: T. Vigneshwaran

heavy rain in 8 districts of Tamil Nadu

தமிழ்நாட்டில் இன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பற்றி பேசுகையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை சார்ந்து இருக்கும்.

மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் கரூர், அகரம் சீகூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (அக்.10) அன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வங்ககடல் பகுதியில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வளைகுடா பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் அக்டோபர் 10-11 தேதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசவைப்புள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:

பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயமா?அடுத்த சூரி யார்?

பண்டிகை காலத்தில் சாதனை அளவை விட ₹ 9,500 மலிவானது தங்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)