News

Wednesday, 04 May 2022 11:17 AM , by: Dinesh Kumar

Chance of heavy rain in Tamil Nadu....

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் தமிழக பகுதியில் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம், வட மற்றும் வட தமிழக மாவட்டங்கள், காரைக்கால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் (கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை) இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

05.05.2022: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பதி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.05.2022: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

07.05.2022: டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய (கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை) மாவட்டங்கள், காரைக்கால், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அதை ஒட்டிய (ஈரோடு, கரூர், மதுரை), கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று (04.05.2022) தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வழி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.

03.05.2022: தெற்கு அந்தமான் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசியது.

04.05.2022: அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

05.05.2022: அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

06.05.2022: அந்தமான் கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு விரிகுடாவில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 70 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

07.05.2022: வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 80 முதல் 70 கிமீ வேகத்திலும், தெற்கு அந்தமான் கடலில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் படிக்க:

அடுத்த 36 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்: வானிலை அறிக்கை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)