நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 April, 2021 2:05 PM IST
Credit : Hindu Tamil

வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)

குமரிக்கடல் பகுதியில் 1.5 முதல் 2.1 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

11.04.21 மற்றும் 12.04.21

மிதமான மழை (Moderate rain)

இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும், தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

13.04.21

தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

14.04.21 மற்றும் 15.04.21

  • மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

  • நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒருசில இடங்களில், இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.


வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகியவற்றில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு  (Warning to fishermen)

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

பகல் வேளைகளில் அதிக வெப்பம் கொளுத்தும் வாய்ப்பு உள்ளதால், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

குறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் Computer Operator வேலைக்குப் பயிற்சி- பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

English Summary: Chance of heavy rain with thunder in 4 districts including Nilgiris!
Published on: 11 April 2021, 02:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now