தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில், அதாவது தமிழக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.0 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
அடுத்த 3 நாட்களில் லேசான மழை
இதன் காரணமாக 20.03.2021 முதல் 22.03.2021 வரையிலான தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
23&24 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு
23.03.2021 மற்றும் 24.03.2021 வரையிலான தேதிகளில் தென் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிசி செல்சியஸை ஒட்டி இருக்கும்.