இன்றும் (ஜனவரி 16) நாளையும் (ஜனவரி 17) தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிவிப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜனவரி 18
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
ஜனவரி 19, 20
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் (Chennai)
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32; குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் பிளவக்கல்லில் 5, தென்காசியில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க