தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வளிமண்டல சுழற்சி (Atmospheric cycle)
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக பிப்ரவரி18ம் தேதியான இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
19.02.21
வளிமண்ல மேலடுக்கில் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடற்கரைப் பகுதிகளில், நிலவும் சுழற்சி காரணமாக, தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
முன்னறிவிப்பு (Forecast)
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
18.2.21ம் மற்றும் 19.01.21 தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று, மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு (Ocean Wave Forecast)
கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் இன்று மாலை 5.30 வரை கடல் அலைகளின் உயரம் 1.5 முதல் 2.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!