News

Wednesday, 24 March 2021 01:38 PM , by: Elavarse Sivakumar

Credit : India TV News

காற்று வேகமாறுபாடு காரணமாக,  திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

காற்றின் வேகமாறுபாடு (Wind speed variation)


24.03.21

  • திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

25.03.21 முதல் 28.03.21 வரை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

எனினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வருவதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். மதிய வேளையில் வெளியில் செல்லாமல் இருந்தால், பல நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

PM Kisan நிதி அடுத்த வாரம் விடுவிப்பு? மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்தால் ரூ.4000 கிடைக்கும்!!

சரியும் முள்ளங்கி விலை: ஒரு கிலோ ரூ.1க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை!!

வீட்டுக் கடனுக்கு கூடுதல் பணம் கொடுக்கிறது டாப் அப் லோன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)