தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீவனர்களுக்கு எச்சரிக்கை
-
வரும் 20 தேதி வரை வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
கோவா மகாராஷ்டிரா தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 -60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் படிக்க...
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!
வேளாண் மற்றும் தோட்டக்கலை முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை
அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!