Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு! கிணறு தோண்ட அரசிடமிருந்து கடனுதவியா? கரும்பு விவசாயி விளக்கம் Belgian Malinois- ஆரம்ப விலை 1 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்? Automatic Drip Irrigation system- விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா? வருடத்திற்கு 9 முறை அறுவடை- அடர்நடவு முறையில் முருங்கையில் இலை உற்பத்தி! Rottweiler Attitude- ராட்வீலர் நாய் இதெல்லாம் பார்த்தாலே எரிச்சல் ஆகுமா? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 December, 2023 5:21 PM IST
Tamil Nadu weather

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

25.12.2023 முதல் 27.12.2023 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.12.2023: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.12.2023 முதல் 31.12.2023 வரை; தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: (25.12.2023 மற்றும் 26.12.2023)- குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.12.2023 முதல் 29.12.2023 வரை: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்- (25.12.2023) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஏசி ரூம்- தினமும் கடுகு எண்ணெய் மசாஜ்: ராஜ வாழ்க்கை வாழும் கோலு-2 முர்ரா எருமை

28.12.2023: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): அண்ணாமலை நகர் (கடலூர்) 3, மரக்காணம் (விழுப்புரம்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 2, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நாலுமுக்கு (திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), ஜெயம்கொண்டம் (அரியலூர்), லால்பேட்டை (கடலூர்), ஊத்து (திருநெல்வேலி) தலா 1.

Read more: டிஏபிக்கு பதிலாக எம்ஏபி மாற்று உரம்- பயிர்களுக்கு நன்மை தருமா?

English Summary: chance of rain in Tamil Nadu at Last week of 2023
Published on: 25 December 2023, 05:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now