தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு (Moderate Rain) வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காற்றில் திசை மாறுபாடு மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இது லேசானது முதல் மிதமானதாக இருக்கலாம்.
வானிலை முன்னறிவிப்பு (Weather forecast)
நாளை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை செய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடக் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
இன்று குமரிக்கடல் பகுதியில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசும். எனவே இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
டிராக்டருடன் கூடிய அறுவடை இயந்திரம்- விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் கிடைக்கும்!
துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!