காற்றின் சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காற்றின் சுழற்சி (Circulation of air)
09.03.21
குமரிக்கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
10.03.21 முதல் 13.03.21 வரை (From 10.03.21 To 13.03.21)
இன்றும் நாளையும் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தில் முற்பகலில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதன்பிறகு தெளிவாகக் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழை பதிவு
கடந்த 224 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் மணிமுத்தாறு, பாபநாசம் ஆகியவற்றில் தலா 2 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திருப்பதிசாரம், நாகர்கோயில் ஆகியவற்றில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
-
எனினும், கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
-
மதிய வேளையில் வெளியில் செல்வதைத் தடுத்தால், பல நோய்களுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநராக விருப்பமா?- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!
ஒரு கப் தேநீர் 1,000 ரூபாய் - இங்கில்லை, கொல்கத்தாவில்!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!