குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இதனால், ரூ.1,700 கோடி பணம் ஒட்டுமொத்த பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளர்கள் இந்த பலனை அடைவார்கள் என கூறியுள்ளார். இதேபோன்று, சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை வாயு மற்றும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை வாயு (பி.என்.ஜி.) ஆகியவற்றுக்கு 10 சதவீத வாட் வரியையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வரி குறைப்பினால், சி.என்.ஜி.யில் கிலோ ஒன்றுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை மக்களுக்கு லாபம் கிடைக்கும். பி.என்.ஜி.யை எடுத்து கொண்டால், கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.5.50 லாபம் கிடைக்கும். இது மக்களுக்கு அரசு அளிக்கும் தீபாவளி பரிசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் நிலையில், நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த முறை பா.ஜ.க. மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் மோத தயார் நிலையில் உள்ளது.
மேலும் படிக்க