News

Thursday, 03 February 2022 10:24 PM , by: R. Balakrishnan

Chandrayan-3

வரும் ஆகஸ்ட் மாதத்தில் சந்திரயான்- 3 ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சந்திராயன் 3 பற்றிய தகவல்களை அளித்தார்.

சந்திராயன்-3 (Chandrayan-3)

2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் 2-லிருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக செயல்படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகின்றன.

இது தொடர்பான வன்பொருள்கள் அவற்றின் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட்டில் செலுத்த திட்டமிடப்பட்ட்டுள்ளது.

கோவிட்-19 (Covid-19)

2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 19 முறை 8 கலன்கள் விண்ணில் செலுத்தும் திட்டமும் உள்ளன. இதில் 07 விண்கலத் திட்டங்கள், 04 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் ஆகியவையும் அடங்கும். நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன.

விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செயபப்பட்ட தேவையால் இயக்கப்படும் மாதிரிகள் பின்னணியில் திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை சாத்தியமாக என்ன செய்ய வேண்டும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)