News

Wednesday, 10 August 2022 03:01 PM , by: R. Balakrishnan

Home Loan

ஒரு வங்கியிலுள்ள கடனை எவ்வாறு வேறு வங்கிக்கு மாற்றுவது என புரியாமல் பல வாடிக்கையாளர்கள் சகித்துக்கொண்டு இருக்கின்றனர். எனினும் ஒரு வங்கியிலிருந்து மற்றொன்றுக்கு கடனை மாற்றுவது ஒன்றும் மிகப் பெரிய விஷயம் கிடையாது. உங்களது வங்கியின் வீட்டுக்கடன் வட்டி அதிகளவு இருந்தால் (அல்லது) வங்கிசேவையால் நீங்கள் சிரமப்பட்டால் எளிதாக வங்கிக் கடனை மாற்றிக் கொள்ளலாம்.

அதற்குரிய வழிமுறைகள் மிகவும் எளிமையானவை ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் ரெப்போ விகிதத்தை அதிகரித்த பின் பல்வேறு வங்கிகள் தற்போது தங்களது கடன் விகிதத்தை அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் வங்கிகளில் வீட்டுக் கடன் விலை உயர்ந்து வருகிறது.

வங்கி கடன் (Bank Loan)

உங்கள் வங்கியில் வாங்கப்பட்ட வீட்டுக்கடனுக்கான வட்டி அதிகளவு இருப்பதாக தெரிந்தால் ஏன் வேறு வங்கிக்கு அதனை மாற்றக்கூடாது என்ற எண்ணம் வருவது இயல்பான ஒன்று. பழைய வங்கியில் இருந்து புது வங்கிக்கு கடனை மாற்றும் செயல்முறை மிகவும் எளிதானது ஆகும். அதன்படி கடனை எந்த வங்கிக்கு மாற்றலாம் என்பதை முடிவுசெய்ய, பல வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை சரிபார்க்க வேண்டும். அதிலிருந்து ஒரு வங்கியைத் தேர்வுசெய்ய வேண்டும். ஒரு புது வங்கியில் நீங்கள் குறைவான EMI செலுத்தவேண்டி இருக்கும். எனினும் அது உங்களுக்கு லாபமானதாக இருக்கும்.

அத்துடன் கடனை மாற்ற முடிவு எடுத்தபின், பழைய வங்கிக்கு அது குறித்து விண்ணப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி வங்கியின் நடைமுறைகளை தெரிந்துக்கொள்ளவும். அதன்பின் வங்கியிலிருந்து கணக்கு அறிக்கை மற்றும் சொத்து ஆவணங்களைப் பெறவேண்டும். அதனை தொடர்ந்து இந்தஆவணங்கள் அனைத்தையும் புது வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

அவ்வாறு புதிய வங்கிக்கு மாற்றுவதற்கு முன்பு பழைய வங்கி NOC எனும் தடையில்லாச் சான்றிதழை வழங்கும். அத்துடன் ஒப்புதல் கடிதம் கொடுக்கப்படும். இக்கடிதத்தை புது வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். வங்கிக்கடன் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் புது வங்கியில் கொடுக்க வேண்டும். ஒரு புது வங்கிக்கு கடனை மாற்ற, நீங்கள் 1 % செயலாக்க கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

புது வங்கியிடம் கொடுக்கவேண்டிய ஆவணங்கள் என்ன?..

  • KYC
  • சொத்துஆவணம்
  • கடன் இருப்புத் தொகை
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • புது வங்கி ஒப்புதல் கடிதம்

இவ்வாறு செயல்முறைகள் அனைத்தும் முடிந்த பின், புது வங்கி உங்களது பழைய வங்கியில் இருந்து ஒப்புதல் கடிதத்தை எடுத்து அதனடிப்படையில் கடனை முடித்துக்கொள்ளும். அதன்பின் புதுவங்கியுடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும். அடுத்ததாக புது வங்கி உடனான கடன் ஒப்பந்தம் துவங்கும். இதற்கிடையில் புதிய வங்கியிலிருந்து பழைய வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன் நிலுவைத் தொகையை செலுத்தவேண்டும். பிறகு உங்களது புதுவங்கியின் மாதாந்திர தவணைத் தொகை அதாவது EMI-ஐ ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க

விவசாயிகள் இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்!

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் முதல் புதிய பென்ஷன் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)