News

Monday, 12 July 2021 11:44 AM , by: Aruljothe Alagar

Free Buses For Women

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளும் வசதி போன்ற ஐந்து திட்டங்களை தொடங்கும் கோப்புகளில் முதல்வர் முதல் கையெழுத்திட்டார். 

முன்னதாக தேர்தல் வாக்குறுதியில் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையை கையெழுத்திட்டார்.

இந்த கொரோனா காலக்கட்டத்தில் இந்த அறிவிப்பால் போக்குவரத்து துறைக்கு பல்வேறு வகையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நிலையில் இருப்பினும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அரசு இந்த சலுகையை மகளிருக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, கடந்த 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு  நாளை முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிந்துகொள்வதற்காக பயணச்சீட்டு தரப்படுவதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து

ஜூலை 1ம் தேதி ஆம்னி பேருந்து சேவை- உரிமையாளர்கள் அறிவிப்பு!

50 % பயணிகளுடன் பேருந்து சேவைக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)