ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான ஜிஎஸ்டி விதிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி விதிகள் (GST rules)
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ஜிஎஸ்டி விதிகளில் சில விதிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல தற்போது ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான ஜிஎஸ்டி விதிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாற்றம் இன்று முதல் பின்பற்றப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பழைய விதியின் படி 100 கோடிக்கும் சமமான அல்லது அதற்கு மேல் வருடாந்திர வருமானம் ஈட்டும் வணிகர்கள் தங்களது மின்னணு விலைப்பட்டியலை போர்டலில் பதிவு செய்ய வேண்டும்.
தற்போதைய புதிய விதிகளின்படி 100 கோடிக்கும் அதிகமாக வருடாந்திர வருமானம் ஈட்டும் வணிகர்கள் விலைப்பட்டியல் வெளியிடப்பட்ட ஏழு நாட்களுக்குள்ளே தங்களுக்கான மின்னணு விலைப்பட்டியலை பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 கோடிக்கும் அதிகமான வருடாந்திர வருமானம் ஈட்டும் வணிகர்கள் தங்களுக்கான இ-இன்வாய்ஸ் ஐஆர்பி போர்ட்டலில் பழைய இன்வாய்ஸ்ஸை புகார் அளிக்க காலக்கெடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்ற குறிப்புகளில் புகார் அளிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு எதுவும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பழைய பென்சன் திட்டம் சாத்தியமே இல்லை: நிதியமைச்சர் எச்சரிக்கை!
கஞ்சா விவசாயத்தை சட்டப்படி அனுமதிக்க அரசு ஆலோசனை: காரணம் இதுதான்!