News

Friday, 20 January 2023 08:02 PM , by: T. Vigneshwaran

Ration Card

திருச்சி மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கிழக்கு-கல்லுக்குழி 1, திருச்சி மேற்கு-வண்ணாரப்பேட்டை 1, திருவெறும்பூர்-வேங்கூர், ஸ்ரீரங்கம்- நாச்சிக்குறிச்சி, மணப்பாறை- கல்பட்டி, மருங்காபுரி- சொக்கம்பட்டி, லால்குடி- கண்ணாக்குடி, மண்ணச்சநல்லூர்- செங்குடி, முசிறி- காலேஜ்ரோடு, துறையூர்- புதிய ஹவுசிங் யூனிட், தொட்டியம்- மணல்மேடு.

எனவே பொதுமக்கள் பொது வினியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளான ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்து பயன்பெறலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

பெரிய நோய்களையும் விரட்டும் பேரிச்சம்பழம்

பொதுமக்களுக்கு ஷாக்1 தமிழ்நாடு முழுவதும் பால் விலை உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)