மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 January, 2022 12:43 PM IST
Changes in vegetable prices .. Vegetable price list of koyambedu market!

பொங்கல் பண்டிகை சமயத்தில் காய்கறிகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால் இந்த வாரத்தில் காய்கறிகளின் விலை ஓரளவுக்குக் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மொத்த சந்தையான கோயம்பேடு சந்தையில் குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (ஜனவரி 21) ஒரு கிலோ தக்காளி விலை 23 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. நேற்று 30 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது, குறிப்பிடதக்கது. வெங்காயம் விலை 32 ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் உயர்ந்து, 33 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவரைக்காய் விலை பாதியாகக் குறைந்து 30 ரூபாய்க்கும், பீன்ஸ் விலையும் 45 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அதே நேரம், ஒரு கிலோ கேரட் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது. மேலும், பல காய்கறியின் விலைப் பட்டியல் தெரிந்துக்கொள்ள கீழே சென்று பார்வையிடவும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாதரண நாட்களை விட காய்கறி விலை உயர்ந்திருந்தாலும், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு காய்கறி விலை குறைந்தே காண்ப்பட்டது, குறிப்பிடதக்கது. அந்த வகையில் பண்டிகையின் நாட்களை கடந்து, ஒரு வாரமே ஆன நிலையில், இன்று மொத்த சந்தையின் காய்கறி விலை குறைந்திருக்கிறது. இது மக்களை மகிழ்ச்சியடையே செய்திருக்கிறது. மேலும் காய்கறி விலை நிலவரம், இதோ,

காய்கறி விலை நிலவரம்!

  • தக்காளி - 23 ரூபாய்க்கும்
  • வெங்காயம் - 33 ரூபாய்க்கும்
  • சின்ன வெங்காயம் - 90 ரூபாய்க்கும்
  • அவரைக்காய் - 30 ரூபாய்க்கும்
  • பீன்ஸ் - 35 ரூபாய்க்கும்
  • பீட்ரூட் - 60 ரூபாய்க்கும்
  • வெண்டைக்காய் - 40 ரூபாய்க்கும்
  • நூக்கல் - 23 ரூபாய்க்கும்
  • உருளைக் கிழங்கு - 18 ரூபாய்க்கும்
  • முள்ளங்கி - 12 ரூபாய்க்கும்
  • புடலங்காய் - 20 ரூபாய்க்கும்
  • சுரைக்காய் - 20 ரூபாய்க்கும்
  • பாகற்காய் - 35 ரூபாய்க்கும்
  • கத்தரிக்காய் - 15 ரூபாய்க்கும்
  • குடை மிளகாய் - 30 ரூபாய்க்கும்
  • கேரட் - 70 ரூபாய்க்கும்
  • காளிபிளவர் - 30 ரூபாய்க்கும்
  • சவுசவு - 10 ரூபாய்க்கும்
  • தேங்காய் - 28 ரூபாய்க்கும்
  • வெள்ளரிக்காய் - 10 ரூபாய்க்கும்
  • முருங்கைக்காய் - 160 ரூபாய்க்கும்
  • இஞ்சி - 30 ரூபாய்க்கும்
  • பச்சை மிளகாய் - 35 ரூபாய்க்கும்
  • கோவைக்காய் - 25 ரூபாய்க்கும்

இந்த விலை பட்டியல் மொத்த சந்தையான கோயம்பேடு சந்தையனுடையது. எனவே சில்லறை விற்பனையாளர்களின் விலையில், இது எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

லில்லி: ஆலங்கார மலர்களில் முதலிடம்; சாகுபடி செய்ய டிப்ஸ்

PM-KUSUM: விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு, உடனே திருத்தவும்

English Summary: Changes in vegetable prices .. Vegetable price list of koyambedu market!
Published on: 21 January 2022, 12:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now