News

Thursday, 12 November 2020 03:49 PM , by: Daisy Rose Mary

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கன மழை

வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது, இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்க்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கன மழைக்கு எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அடுத்த இடைவெளிவிட்டு மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

தமிழக அரசின் மீன்கள் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை!!

மானிய விலையில் நோய் எதிா்ப்புத்திறன் கொண்ட நெல் விதைகள் - விவசாயிகள் பயன்பெறலாம்!!

ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் சாகுபடி செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)