News

Sunday, 27 December 2020 05:57 PM , by: Daisy Rose Mary

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாளை முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவடங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்

29.12.2020 - 30.12.2020 ; தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் இலேசான மழையும், வடக்கு உள்மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்

30-12-2020 - 31-12-2020 ; தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியலை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)