News

Saturday, 24 October 2020 02:37 PM , by: Daisy Rose Mary

Credit : AsiaNet Tamil

அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு கனமழை (Rain Alert)

அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு (அக்டோபர் 26,27,28) தென் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை (Chennai weather)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மழை பொழிவு (Rain Fall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணி (திருவள்ளூர்), நாற்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 5 தலா செ.மீ., பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) 4 தலா செ.மீ., அரக்கோணம் (ராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), திருவாலங்காடு (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பரூர் (கிருஷ்ணகிரி) 3 தலா செ.மீ., திருப்பத்தூர் P.T.O (திருப்பத்தூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் ) 2 தலா செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Fisherman warning)

அக்டோபர் 24,25 மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!

விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும் - விவரம் உள்ளே!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)