News

Wednesday, 18 November 2020 01:54 PM , by: Daisy Rose Mary

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளிலிரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கும் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 (19.11.2020) மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மழைப்பொழிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21செ.மீ., பரமக்குடி (ராமநாதபுரம்) 13செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி ) 12செ.மீ., தேவகோட்டை (சிவகங்கை), கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 10செ.மீ., கொடைக்கானல் (திண்டுக்கல்), அரிமளம் (புதுக்கோட்டை),சிவகாசி (விருதுநகர்), காரைக்குடி தலா 9செ.மீ., நன்னிலம் (திருவாரூர்), சிவகிரி (தென்காசி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கூடலூர் (தேனி), திருச்செந்தூர் தலா 8செ.மீ., குன்னூர் (நீலகிரி), பேரையூர் (மதுரை), தாராபுரம் (திருப்பூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர் ), மணிமுத்தாறு (திருநெல்வேலி ) தலா 7 செ.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Fisherman warning)

  • 18.11.2020: கேரள மற்றும் கர்நாடக கடற்பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • 19.11.2020: லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிராமங்களில் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க 35% மானியம் மற்றும் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி!!

நாட்டுகோழி வளர்ப்பு திட்டம் : 50% மானியத்தில் 1000 கோழி குஞ்சுகள், முட்டை அடைகாத்தல் கருவி - விண்ணப்பங்கள் வரவேற்பு!!

கோழி பண்ணை அமைக்கும் தோனி - 2000 கருங்கோழிகள் ஆர்டர் !!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)