News

Thursday, 31 December 2020 04:54 PM , by: Daisy Rose Mary

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.
மேலும் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை

  • ஜனவரி 1-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

  • ஜனவரி 2-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

  • ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்

மழைபொழிவு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடம் (நாகப்பட்டினம்) 9 செ.மீ., திண்டிவனம் (விழுப்புரம் ) 7செ.மீ., செஞ்சி , மரக்காணம் (விழுப்புரம்) தலா 6செ.மீ., ஆடுதுறை (தஞ்சாவூர்), செய்யூர் (செங்கல்பட்டு), விளாத்திகுளம் (தூத்துக்குடி) தலா 5செ.மீ., ராமேஸ்வரம் , கடலூர், பாண்டிச்சேரி தலா 4 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

டிசம்பர் 31, ஜனவரி 01 குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என இவ்வாறு வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)