சென்னையில் ஒரு மாத விலையேற்றத்துக்குப் பிறகு, இந்த மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. ஏதோ ஒரு நாள் விலையேற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. நேற்று தக்காளின் விலை ரூ.100ஐ எட்டியது. எனினும் இன்று தக்காளியுடன் சேர்ந்து, பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்திருக்கிறது. முழு விலை நிலவரம் அறிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
சென்னையில் இருக்கும் கோயம்பேடு சந்தை மொத்த காய்கறி சந்தையாகும். இந்நிலையில் கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (டிசம்பர் 28) ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் விலை 80 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல், பீன்ஸ் விலை 45 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 160 ரூபாய்க்கும், கேரட் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலையிலும் ஏற்றம் காணப்பட்டது, மேலும் மழையினால் பயிர்கள் அழுவியதும் ஒரு முக்கிய காரணமாகும். இதையடுத்து, இம்மாதமும் அதே நிலை தொடரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், விலை குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
காய்கறி விலை Vegetables price
தக்காளி - 70 ரூபாய்
வெங்காயம் - 38 ரூபாய்
அவரைக்காய் - 60 ரூபாய்
பீன்ஸ் - 40 ரூபாய்
பீட்ரூட் - 80 ரூபாய்
வெண்டைக்காய் - 90 ரூபாய்
நூக்கல் - 40 ரூபாய்
உருளைக் கிழங்கு - 25 ரூபாய்
முள்ளங்கி - 25 ரூபாய்
புடலங்காய் - 60 ரூபாய்
சுரைக்காய் - 60 ரூபாய்
பாகற்காய் - 60 ரூபாய்
கத்தரிக்காய் - 60 ரூபாய்
குடை மிளகாய் - 80 ரூபாய்
கேரட் - 75 ரூபாய்
காளிபிளவர் - 60 ரூபாய்
சவுசவு - 20 ரூபாய்
தேங்காய் - 30 ரூபாய்
வெள்ளரிக்காய் - 12 ரூபாய்
முருங்கைக்காய் - 160 ரூபாய்
இஞ்சி - 60 ரூபாய்
பச்சை மிளகாய் - 35 ரூபாய்
கோவைக்காய் - 60 ரூபாய்
மேலும் படிக்க:
Flipkart Sale: அட்டகாசமான ஆஃபரில் ஸ்மார்ட்வாட்ச் - 60% வரை தள்ளுபடி