கோத்தகிரி மார்க்கெட்டுக்கு கோழி குஞ்சு வடிவிலான தக்காளி (Tomato) விற்பனைக்கு வந்தது. பொதுமக்கள் இந்த தக்காளியை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
கோழி குஞ்சு வடிவ தக்காளி!
கோத்தகிரி மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் (Vegetables) விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளி பெட்டியில் இருந்த தக்காளி ஒன்று வித்தியாசமான வடிவத்தில் இருந்தது. இது காண்பதற்கு கோழி குஞ்சு, பென்குயின் போன்ற தோற்றத்தில் காணப்பட்டது.
ஆச்சரியம்
தக்காளியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக தனது கடையின் முன்பு வைத்திருந்தார். இதனை பொதுமக்கள் ஆச்சரித்துடன் பார்த்து சென்றனர்.
முதல் முறையாக புதிய வடிவிலான தக்காளியைப் பாரத்ததும், அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். கோத்தகிரி மார்க்கெட்டில் தக்காளி கண்காட்சி நடைபெறுவது போல, காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.
மேலும் படிக்க
மக்களைத் தேடி மருத்துவம்: வீடு தேடி வருகிறது மாத்திரை
தமிழகத்திற்கு அடுத்த பாதிப்பு: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திரா திட்டம்!