தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியின்படி, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு சுதந்திர தினத்தன்று வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக (DMK)
நடந்த முடிந்தத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், எதிர்பார்த்தபடி திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
ஆகஸ்ட் 15ம்தேதி (August 15)
இதன் ஒருபகுதியாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஏதுவாகவும், எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலும், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்து உள்ளது.
வெற்றிக்கு அடித்தளம் (The foundation for success)
குடும்பத் தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற இந்த வாக்குறுதி, தி.மு.க., ஆட்சியை பிடிக்க, முக்கிய பங்கு வகித்ததாக, அக்கட்சியினர் நம்புகின்றனர்.
கடும் அதிருப்தி (Severe dissatisfaction)
அதேநேரத்தில், ஆட்சியைப் பிடித்த நிலையில், தி.மு.க., அரசு, இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் தாமதம் செய்து வருவது, பெண்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிற கட்சிகள் அறிவுறுத்தல் (Instruction of other parties)
தமிழக பிஜேபி தரப்பினர், இத்திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு, அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேக் கோரிக்கையை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விமர்சனம் (Review)
சமூக வலைதளங்களிலும், பலர் 'மாதம், 1,000 ரூபாய் வழங்குவது; பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பது' போன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை விமர்சித்து, தி.மு.க.,வுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் (Local elections)
இந்நிலையில், விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளது.
பெயரை மாற்ற வேண்டுமா? (Need to change the name?)
இதனிடையே இந்தத் திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய பலர் முற்படுவதாகவும், அதற்காக இ-சேவை மையங்களில் காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதில் யாரும் பீதி அடைய வேண்டாம்.
உரிய நேரத்தில் இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க...