News

Thursday, 18 February 2021 11:52 AM , by: Elavarse Sivakumar

Dailythanthi

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டு கால கனவுத் திட்டமான காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Chief Minister) வரும் 21ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

கனவுத் திட்டம் (Dream Project)

விவசாயிகளின் நூற்றாண்டுகாலக் கனவான இந்தத் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

3 கட்டங்கள் (Three Phase)

முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2ம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 109.695 கி.மீ., 3ம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 34.045 கி.மீ. செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டப் பணிகள் (1st Phase Works)

இத்திட்டத்தில் முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118,45 கி.மீ. தூரம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக கரூர் மாவட்டத்தில் 47.235 கி.மீ. தூரமும், திருச்சி மாவட்டத்தில் 19.891 கி.மீ. தூரமும், புதுக்கோட்டை மாவட்டத்தில்52.324 கி.மீ. தூரமும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தினால் இந்த 3 மாவட்டங்களிலும் உள்ள 18.566 எக்டேர் நிலங்கள் பாசன வசதி மேம்படும்.

காவிரி-தெற்கு வெள்ளாறு வரையிலான இத்திட்டத்திற்கு இரு கட்டங்களுக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீ. தூரத்திற்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 54, 65 கி.மீ. முதல் 60.05 கி.மீ. வரையும் அதாவது திருச்சி மாவட்டத்தில் 183 கி.மீ. நீளமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.525 கி.மீ. நீளத்திற்கும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆறுகள் இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21ந் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் அறிக்கை (Minister`s Statement)

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

  • காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஏற்கனவே - ரூ.14,000 கோடி திட்ட மதிப்பீடு செய்து பட்ஜெட்டில் முதற்கட்ட பணிகளுக்காக ரூ 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலமெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

  • மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து இதற்கான பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • அதன்படி இத்திட்டத்திற்கான டெண்டர் (Tender) பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!

PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!

ஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)