இயற்கையை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான மஞ்சப்பை இயக்கம் மற்றும் அதற்கு மாற்றான பொருட்கள் குறித்த கண்காட்சியை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மஞ்சப்பை தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார்.
மஞ்சப்பை (Yellow Bag)
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என கிண்டலாக பேசி வந்தனர். ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. வளர்ச்சிக்கு இணையாக சுற்றுச்சூழலுக்கு (Environment) முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிளாஸ்டிக், சுற்றுச்சூழலை சீரழிக்கிறது. விவசாயத்தை பாதிக்கிறது.
பிளாஸ்டிக் தடை (Ban Plastic)
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சூழலுக்கு பெரும் ஆபத்து. பிளாஸ்டிக் பயன்பாட்டால் கால்நடை கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. இயற்கையை கெடுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதனை மக்கள் தவிர்க்க வேண்டும். விதி மீறிய 130 தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க
நவீன வசதிகளுடன் தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அரசுப் பள்ளி!
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!