News

Friday, 08 October 2021 07:52 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற குறுவை நெல் கொள்முதல் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.10.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், தற்போது தமிழ்நாட்டில் குறுவைப் பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, அப்பணிகளை ஆய்வு செய்தார்.

விவரங்கள் சேகரிப்பு (Collection of details)

மேலும், டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

36 ஆயிரத்து 289 டன் (36 thousand 289 tons)

குறுவைப் பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த ஒரு வாரத்தில் இதுவரை, 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மேற்பார்வை (Supervised by the Minister)

தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், கொள்முதல் பணிகள் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இப்பணிகளை மேற்பார்வை இடுவதற்காக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

Bharatbandh: விவசாயிகளுக்கு ஆதரவாகப் பள்ளி கல்லூரிகள் மூடல்!

தப்பு செஞ்சா இனி கை,கால் கட்- அதிர்ச்சியில் மக்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)