சப்போட்டா பழங்கள் விரைவில் கெட்டுப்போகும் நிலையில் அதனை பிஸ்கட் தயாரிக்க பயன்படுத்திய நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கணிசமாக வருவாயும் அதிகரித்துள்ளது.
வைரம் மற்றும் ஜவுளிகளின் தலைநகராக திகழும் சூரத்தில் தற்போது சிக்கூ அல்லது சப்போட்டாவினால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்களின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.
நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களின் பெரிய குழுக்கள் இரயில்கள் அல்லது பேருந்துகள் மூலம் சூரத்திற்கு வந்து சிக்கூ அல்லது சப்போட்டா கூடைகளை விற்கிறார்கள். இந்த பெண்கள் மும்பை அல்லது வல்சாத் போன்ற பிற முக்கிய நகரங்களுக்கும் அடிக்கடி வருகிறார்கள். சப்போட்டா விவசாயிகள் தங்கள் அன்றாட விளைபொருட்களை அறுவடை செய்த உடனேயே விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
பொதுவாக, சப்போட்டா அதிகபட்சமாக ஐந்து நாட்கள் வரை மட்டுமே நல்ல நிலையில் இருப்பதால், அறுவடை செய்த அன்றே சப்போட்டாவை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் விரும்புகின்றனர். நவ்சாரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 ஹெக்டேரில் சுமார் 75,700 மெட்ரிக் டன் சப்போட்டா உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் பழங்களின் குறுகிய கால வாழ்நாளினால் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது.
நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம் கொடுத்த ஐடியா:
நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகத்தின் (NAU) அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத் துறையானது, முழு கோதுமை மாவுடன் சிக்கூ பவுடரைக் கலந்து பிஸ்கட் தயாரிக்கும் முறையை உருவாக்கியது சப்போட்டா விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கத்துள்ளது. "சிக்கூ பவுடர் ஏற்கனவே உற்பத்தியில் உள்ளது, ஆனால் நாங்கள் பிஸ்கட் தயாரிப்பதற்கான ஒரு முறையை உருவாக்கினோம். இதனால் விவசாயிகள் பழப்பயிரில் இருந்து சிறந்த வருமானம் பெற முடியும்," என்கிறார் NAU, உதவி பேராசிரியர் ஜிலன் மயானி.
NAU ஆராய்ச்சியாளர்கள் சிக்கூ தூள் தயாரிக்க சப்போட்டாவினை கூழாக மாற்றிக் கொள்கிறார்கள். பின்னர் அதனை உலர்த்துகின்றனர்.
சப்போட்டாவில் உள்ள சர்க்கரையின் உள்ளடக்கம் காரணமாக, அதனை உலர்த்துவதற்கு நேரம் எடுக்கிறது. காய்ந்த கூழ் நன்றாக தூளாக தயாரித்த பிறகு, அவர்கள் ஆட்டாவை கலந்து பிஸ்கட் செய்கிறார்கள். ஆரோக்கியமாக இருக்க மைதா தவிர்க்கப்படுகிறது.
"குளிர்காலத்தில், 20 கிலோ பழத்திற்கு, 350 ரூபாய்க்கு மேல் கிடைக்கும், ஆனால் கோடைக்காலத்தில் வெப்பத்தால் பழத்தின் விலையானது 150 ரூபாய்க்கும் கீழே குறைகிறது. அத்தகைய நேரத்தில், இந்த பதப்படுத்தும் முறை பயனுள்ளதாக இருக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என கல்லூரி பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்”.
நவ்சாரியில் உள்ள கர்சாத் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரசூல் படேல் கூறுகையில், இந்த விளைப்பொருட்களின் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பத்தினால் எங்களின் வருவாய் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
pic courtesy: pexels
மேலும் காண்க: