News

Sunday, 19 September 2021 09:05 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

பாரம்பரிய விளையாட்டு (Traditional game)

தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டுக்குத் தடை கோரி விலங்குகள் நல அமைப்பு நீதிமன்றம் சென்றபோதிலும், அரசு மேற்கொண்ட முயற்சியால் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களைக் கற்க இளைய தலைமுறையினரிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அங்கீகாரம் (Recognition)

இது குறித்து சுற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

முதல்வர் அறிவுறுத்தல் (Chief Instruction)

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டைப் பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையானச் சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்துள்ளது.

புதிய கேலோ இந்தியா" திட்டத்தின் கீழான "விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்" என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழினத்திற்குப் பெருமை (Proud of Tamil Nadu)

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.

எல்லா விழாக்களிலும் (At all ceremonies)

தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாமல் இடம்பெறும். ஏனையப் பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!

வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)