News

Wednesday, 21 October 2020 05:11 PM , by: KJ Staff

Credit : New Indian Express

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடுவதற்கான மானியத் தொகைக்கு, முதலமைச்சர் நாராயணசாமி (Narayanasamy) ஒப்புதல் அளித்துள்ளார். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின், விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் (Free electricity) அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான தொகையை வேளாண் துறையானது மின்துறைக்கு (power sector) செலுத்தி விடும்.

இலவச மின்சாரம்:

புதுச்சேரி மாநிலத்தில் மேலாண்மையை பெருக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், அரசு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம் (Crop protection technology) என்கிற திட்டத்தின் மூலமாக இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

மானியத்தொகை:

கடந்த 2017-18ம் ஆண்டு காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த 623 விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கான (Electric motor) 3-வது மற்றும் 4-வது காலாண்டுகளுக்கு, மானியத்தொகையான (Subsidy Amount) ரூ.6 இலட்சத்து 57 ஆயிரத்து 37 மற்றும் 2018-19 ஆண்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 139 விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கான 4 காலாண்டுகளுக்கான மானியத்தொகை ரூ.3 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரத்து 366 என மொத்தம் ரூ.3.53 கோடியினை வேளாண்துறை (Agriculture Department) மூலமாக மின்துறைக்கு வழங்குவதற்கான செலவின ஒப்புதலை, முதலமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 762 விவசாயிகளின் நலன், அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மின் இணைப்பு பெற விஏஓ சான்றிதழ் மட்டுமே போதும்!

மக்காச்சோளத்தில், படைப்புழுவைக் கட்டுப்படுத்த, ஹெக்டேருக்கு 2000 ரூபாய் மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)