இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 March, 2023 10:13 AM IST
CM of Tamil Nadu announced the policy of the freight transport department

தலைமைச் செயலகத்தில், முதல்வர் ”தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023” மற்றும் "தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்" ஆகியவற்றை வெளியிட்டார்.

தமிழக அரசு சார்பில் சமீபத்தில் “தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை-2023” மற்றும் ”தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023” ஆகியவற்றை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஜவுளித்துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை 2023:

மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகமான, சிக்கனமான, நிலையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்துச் சூழல் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போட்டித்திறனை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முக்கிய கருப்பொருட்கள் (Themes):

ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பினை உருவாக்குதல் (Integrated and Robust Logistics Infrastructure Development), குறைந்த செலவிலான மற்றும் உயர்ந்த தரத்திலான சேவைகள் கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல். (Cost effective & high quality logistics services), ஒற்றைச்சாளர அனுமதி வழங்கும் அமைப்பை உருவாக்குதல் (Single Window Clearance), சரக்கு போக்குவரத்து சூழல்அமைப்பின் மீள்திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதி செய்தல் (Resilience & Sustainability), புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்தல் (New Technology), சரக்கு போக்குவரத்துத் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் (Skill Development) ஆகியவை இக்கொள்கையின் முக்கிய கருப்பொருட்கள் ஆகும்.

இக்கொள்கையின் மூலம் சரக்கு போக்குவரத்து துறைக்கு, "தொழில் அந்தஸ்து (Industrial Status) வழங்குதல், "ஒற்றை சாளர அனுமதி" (Single Window Clearances) வழங்குதல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து துறையில் புதிய தொழில் நுட்ப உத்திகளை செயற்படுத்துதல், திறன் மேம்படுத்துதல், நிலைப்பு தன்மையை (Sustainability) உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கப்படும்.

"சரக்கு போக்குவரத்து செயல் திட்டம்" (Logistics Plan) மூலம் மூன்று பெருவழி தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.63,000 கோடி அளவிற்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும் என கொள்கை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை (Man Made Fibre) நூல், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம் குறித்த தகவல் பின்வருமாறு-

இச்சிறப்புத் திட்டமானது, உயர் மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதித் திறன் கொண்ட புதிய தலைமுறை ஜவுளி பிரிவுகள் (தொழில் நுட்ப ஜவுளி/ செயற்கைஇழை நூல்) மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கைஇழை நூல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆடை உற்பத்தியில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள்

வழங்குதல், பெரிய திட்டங்களுக்கு சற்றே குறைவாக உள்ள முதலீடுகளுக்கும் அதிக அளவிலான ஊக்கத் ஊக்கத் தொகை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஊக்குவித்து, இத்துறையை பல்வகைப்படுத்துதல், மாநிலம் முழுவதும், முக்கியமாக தொழில்ரீதியாக வகை செய்யப்பட்டுள்ள 'B' & 'C' வகை மாவட்டங்களில் சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை குறித்து விளக்குகிறது.

இந்த நிகழ்ச்சியில், வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு., வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் ம.பல்லவி பல்தேவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண்க:

PM MITRA திட்டத்தை செயல்படுத்த நிலமும், சிப்காட் நிறுவனமும் ரெடி.. முதல்வர் கோரிக்கை கடிதம்

அடுத்த 5 வருஷத்துக்கு.. பெட்ரோலுடன் எத்தனால்- அரசின் கொள்கை முடிவு வெளியீடு

English Summary: CM of Tamil Nadu announced the policy of the freight transport department
Published on: 19 March 2023, 10:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now