ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கைகள் வைத்திருந்தனர். வேளாண் பெருமக்களின் இந்த வேண்டுகோளை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை திறப்பு
அதன்படி, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அன்டோபர் 28ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உத்தரவிடப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15 ஆயிரத்து,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் .
மேலும் விவசாய பெருமக்கள் நீரை சிக்கமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மழைக்கு வாய்ப்பு
இதனிடையே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளின், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ண கிரி, வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானத மழை பெய்யக்கூடும்.
ஜூலை 4ம் தேதி வரை, தென்கிழக்கு, மத்தியக் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Elavarase Sivakumar
Krishi Jagran
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!
ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!
தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!