கடந்த சில வாரங்களாக தேங்காய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காயின் விலை 3 ரூபாய் வரை குறைந்துள்ள நிலையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் வேண்டுக்கோள் வைத்துள்ளனர்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி வி.வீரசேனன் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், கடந்த சில வாரங்களாக தேங்காய் விலை ரூ.3 வரை குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் விலை குறைந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட சரிவு விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிலைமையை சமாளிக்க அரசின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர்.
மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபச்சத்திரம், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய பகுதிகளில் 90,000 ஏக்கரில் தென்னை பயிரிடப்படுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கொள்முதல் விலை விவசாயிகளுக்கு 8 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. நுகர்வோர்கள் 15 ரூபாய்க்கு மேல் விற்கிறார்கள்.
”தேங்காய் பறித்தல், சேகரிப்பு மற்றும் மட்டை அகற்றுதல் ஆகியவற்றுக்கான கூலி விலை அப்படியே இருந்தாலும், கொள்முதல் விலை குறைந்துள்ளது", இது விவசாயிகளின் நஷ்டத்தை அதிகரிக்கிறது என்று வீரசேனன் குறிப்பிட்டார். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் ஊராட்சி ஒன்றியப் பொருளாளரும், பேராவூரணியை அடுத்த பழையநகரம் கிராமத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி கூறுகையில், 8 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு தேங்காய்கான மொத்த செலவு ரூபாய் 4 ஆகும். இதில் தேங்காய் பறிப்பு, சேகரிப்பு, மட்டை அகற்றுதல், போக்குவரத்து போன்றவை அடங்கும்.
தேங்காய் ஒன்றுக்கு 4 ரூபாய் மட்டுமே லாபமாக கிடைக்கும் நிலையில், அதை வைத்துக்கொண்டு தோப்புகளை கூட பராமரிக்க முடியவில்லை. வெளிச்சந்தையில் கிலோவுக்கு ரூ.85-க்கு விற்கப்படும் கொப்பரையினை பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யும் மார்கெட்டிங் கமிட்டிகள் நியாயமான விலையில் கிலோ ரூ.109-க்கு கொள்முதல் செய்கின்றன. ஆனால் அனைத்து விவசாயிகளும் கொப்பரை தயாரிக்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.
"கொப்பரை தயாரிக்க பெரிய உலர் தளங்கள் தேவைப்படுவதால், பணக்கார விவசாயிகள் மட்டுமே அதை செய்ய முடியும்," என்கிறார் கருணாமூர்த்தி. கொப்பரை உற்பத்திக்கு திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும், அவர்கள் மாவட்டத்தில் மிகக் குறைவாகவே உள்ளனர் என்றும் வீரசேனன் சுட்டிக்காட்டுகிறார்.
"கேரளாவில் செய்வது போல், ஒரு கிலோ 60 ரூபாய் என்ற விலையில், உமி நீக்கப்பட்ட தேங்காய்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்," என்று கருணாமூர்த்தி கூறுகிறார்.
கொப்பரை கொள்முதல் விலையை கிலோவுக்கு 200 ரூபாயாக உயர்த்தவும் கோரினார். மாவட்டத்தில் குறிப்பாக பட்டுக்கோட்டையில் உள்ள தேங்காய் வர்த்தக மையத்தில் தேங்காய் மதிப்பு கூட்டல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வீரசேனன் கேட்டுக்கொண்டார்.
pic courtesy: pexels
மேலும் காண்க:
ஏக்கருக்கு 45 கிலோ யூரியா- குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்ட விவரம்