நமக்கு பல்வேறு நன்மைகளை அளித்து, நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டவற்றுக்காக குறிப்பிட்ட தினத்தைக் கடைப்பிடித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, எத்தனையோ பலன்களைத் தன்னுள் புதைத்துள்ள தேங்காய் தினமாக செப்டம்பர் 2ம் தேதி கொண்டாப்படுகிறது.
இந்த நாளையொட்டி, தேங்காயின் சுவாரஸ்யத் தகவல்கள்!
-
சூப்பர் ஃபுட் என வருணிக்கப்படும் தேங்காயில் ஜீரணத்தைத் தூண்டும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இரும்பு, மெக்னீசியம், ஜிங்க் என வைட்டமின்களும், தாதுப்புகளும் அடங்கியுள்ளன.
-
மனித உடலுக்குத் தேவைப்படும் electrolytesகளை அதிகளவில் கொண்டுள்ளது தேங்காய் தண்ணீர்.
-
உடலில் நார்சத்து (Fiber) வற்றிப்போகாமல் தடுப்பதுடன், நரம்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கும் தேங்காய் தண்ணீர் காரணமாக அமைகிறது.
-
தேங்காய் துண்டை (Coconut meat) சாப்பிடுவதால், உடலில் உள்ள கொழுப்புகள் (Cholesterol) எரிக்கப்பட்டு, உடல்எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது.
-
நோய் எதிர்ப்புச் சக்தியையும் (Immunity) தூண்டுகிறது.
-
மேனோ லாரிக் அமிலம் என்ற மூலக்கூறு இடம்பெற்றிருப்பதால், தாய்பாலுக்கு நிகரான நோய் எதிர்ப்புச்சக்தியைக் கொண்டது தேங்காய் பால். இதனைக் குடிப்பதால், உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதுடன், கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தையும் மேம்படுத்துகிறது.
-
தேங்காய் பாலில் வைட்டமின்கள் B1, B3, B5, B6, C, E மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.
-
ஒட்டுமொத்தமாக தேங்காய், உடல், தோல், கூந்தல், ஆரோக்கியம் என அனைத்திற்கும் ஏற்றது.
-
மிகச்சிறந்த சானிடெய்சராகப் பயன்படுகிறது தேங்காய் எண்ணெய்.
தேங்காயின் ரகசியங்கள்
-
தேங்காய் எண்ணெய் அழகுப் பொருட்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
-
தேங்காய் தண்ணீர், நவீன திசுக்கள் ஆராய்ச்சியில் (tissue culture science) பயன்படுத்தப்படுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கும், இளமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், தேங்காய் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது மேற்காள்ளப்பட்டு வருகின்றன.
-
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2,000 கோடிக்கும் மேற்பட்ட தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
-
தென்னையில் இருந்து தேங்காய் விழுந்து ஏற்படும் விபத்துக்களில் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
-
தேங்காய் தண்ணீர் மனித பிளாஸ்மாவிற்கு தற்காலியாக மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
-
அதனால், கொரோனா காலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு அதன் மகத்துவத்தையும், மருத்துவப் பயன்களையும் அனுபவிப்போம்.
எனவே தாய்ப்பால், வெண்பூசணி போல், தேங்காயும் உடலுக்கு தேவையான மிகச் சிறந்த பிராண உணவு என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க...
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!