கோவையில் மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.
மோசமான பாதிப்பு (Bad impact)
இந்தியாவில் கடந்த 2020 மற்றும் 2021ம் ம் ஆண்டுகளில் ஆட்டம் போட்டக் கொரோனா, இரண்டு அலைகளாக பரவியதால் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்திக்க நேர்ந்தது.
பாதுகாப்பு ஆயுதம் (Security weapon)
அதேநேரத்தில் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, கடந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு கிடைத்த ஆயுதமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.
ஒமிக்ரான் (Omicron)
இதனிடையே ஒமிக்ரான் (Omicron) என்ற புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வேரியண்ட் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட புதிய வேரியண்ட் ஆபத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்ததாத குழந்தைகளை எந்த அளவுக்கு ஓமிக்ரான் வேரியண்ட் பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தைத் தருவதாக உள்ளது.
ஆட்சியர் ஆய்வு (Collector inspection)
இதற்கிடையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சிங்காநல்லூர் சுற்றுப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாகச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பை குறைத்துள்ளோம், ஒமிக்ரான் வைரஸ் புதிதாக வந்துள்ளது. இருப்பினும் அந்த தொற்று நம் நாட்டில் இன்னும் கண்டறியப்படவில்லை.
கோவை விமான நிலையத்தில் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் (RT-PCR Test) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அபராதம் (Penalty)
பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் பயணிகள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தினமும் சுமார் 9 ஆயிரம் கொரோனா (Coronavirus) சோதனை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட எல்லையான வாளையார் பகுதியில் மீண்டும் முகாம் அமைத்து கண்கணிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஒமிக்ரான் உயிரிழப்பைத் தடுக்க இது ஒன்றே வழி!
ஒமிக்ரான் வைரசால், 3-வது அலைக்கு வாய்ப்பு- மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!