மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2023 9:54 AM IST
Coimbatore district is a stalwart of the new agro forestry scheme

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.96.45 இலட்சம் மதிப்பீட்டில் 6,171 விவசாயிகளுக்கு 6,44,100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை “இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்" என்ற இலக்கினை அடைய தேசிய வேளாண்  வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், கூட்டுப் பண்ணையம், விதை கிராமத் திட்டம், பனை மேம்பாட்டுத்திட்டம், வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கும் திட்டம், தென்னை ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை, தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டம், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், இயற்கை வேளாண் ஊக்குவிப்பு திட்டம், நீடித்த நிலையான பருத்தி இயக்கத் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை சாகுபடி நிலத்தில் அமைத்தல் இயக்கம், மண்வள இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய வேளாண் காடு வளர்ப்புத்திட்டம்:

அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.96.45இலட்சம் மதிப்பீட்டில் 6,171 விவசாயிகளுக்கு 6,44,100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் 77 விவசாயிகளுக்கு ரூ.72.18 இலட்சம் மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர், புதர் அகற்றும் கருவி, தட்டுவெட்டும் கருவி, சுழற்கலப்பை போன்ற இயந்திரங்கள்/கருவிகளும், வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 5 விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க 40 சதவிகித மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 42,851 நெட்டை தென்னங்கன்றுகள் ரூ.23.49 இலட்சம் மதிப்பீட்டில் 17,725 பண்ணை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரப்பு பயிர் சாகுபடிக்கு பயறு வகை விதைகள் 555 ஹெக்டர் பரப்பிற்கு, 740 தெளிப்பான்கள், 379 வேளாண் உபகரணத் தொகுப்பு, 387 தார்பாலின் ஆகியன ரூ.28.80 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு 1691 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும், திரவ உயிர் உரம் 1072 எக்டர் பரப்பிற்கு ரூ.3.21 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு 526 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

pic courtesy: pexels

மேலும் காண்க:

உரத்துறையில் இந்தியாவிற்கான சுதந்திரம் தொடங்கியது- IFFCO உரம் குறித்து அமித்ஷா பெருமிதம்

English Summary: Coimbatore district is a stalwart of the new agro forestry scheme
Published on: 27 April 2023, 09:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now