கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள வேண்டுமென கடைகாரர்களை நிர்ப்பந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள வேண்டுமென கடைகாரர்களை நிர்ப்பந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடியை வாங்கிக் கொள்ளாவிட்டால் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது .இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளதால், கோவை மாநகராட்சிக்கு எதிராக பொது மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நாட்டில் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது, இதற்காக மத்திய மாநில அரசுகள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. நாட்டின் 75வது சுதந்திரதினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும், வீடு தோறும் தேசிய கொடியேற்றி கொண்டாட நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த புகார் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: