தொழில் முனைவோர்களுக்கு ‘‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது வழங்கும் விழா கோவை மாவட்டத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு 44 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார்.
தொழில் முனைவோர் (Entrepreneurs)
கடந்த 2021 பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு தேவையானதை தொலை நோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது.
கோவை ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களுக்கு உகந்த மாவட்டமாக, கோவை மாவட்டம் உள்ளது. கோவையும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொழில் முனைவோர்கள் வளர்ந்து வரும் இந்நேரத்தில், மத்திய அமைச்சரின் இந்த கருத்து அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும். அதோடு, புதிய உத்வேகமும், நம்பிக்கையும் பிறக்கும்.
மேலும் படிக்க
கோதுமை நிறுத்தி வைப்பு: மத்திய அரசு முடிவு!
கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!